கோத்தாவை விமர்சித்த பிரித்தானிய செய்தி நிறுவனத்திற்கு எதிராக கோத்தாவின் நிழல் அமைப்புகள் போர்க்கொடி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

கோத்தாவை விமர்சித்த பிரித்தானிய செய்தி நிறுவனத்திற்கு எதிராக கோத்தாவின் நிழல் அமைப்புகள் போர்க்கொடிசர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ‘ தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ‘ என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கை ஆயுத படைகளுக்கும் LTTE பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் இன ஒழிப்புக்கு கடந்த 17 ஆம் திகதி இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பு கூறக் கூடிய இராணுவத்தலைவர் என குறித்த செய்திச்சேவை விமர்சித்தமைக்கு நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

உண்மையில் இறுதி யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி தாக்கினார்கள்.

இதே போல் இலங்கை ஆயுத படைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பி.பி;.சி பல தடவைகள் வெளியிட்டு வந்துள்ளது
.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பாதுகாக்கும் வகையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கின்றோம்.