நீதிமன்றம், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை அவர் இவ்வாறு கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சின் செயலாளர் ஜயந்தி விஜயதுங்க உட்பட அமைச்சின் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.