பிரான்ஸில், குடும்ப வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பாரிஸ்சின் சாலைகளும் மற்ற நகரங்களின் சாலைகளும் ஊதா நிறத்தில் உடை அணிந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெண்கள் உரிமை இயக்கத்தின் நிறமான ஊதாவைப் பயன்படுத்தி அனைவரும் அணிவகுத்து சென்றனர்.
பெண் கொலைகளைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலைமையில் நடந்த தேசிய கருத்தரங்கு முடிவுக்கு வரும் இரண்டு நாள்களுக்கு முன் இந்த ஆர்பாட்டம் நடந்துள்ளது.
பிரான்ஸில், ஒவ்வொரு மூன்று நாள்களில் ஒரு பெண் தன் துணையாலும் அல்லது முன்னாள் துணையாலும் இறப்பதாக சொல்லப்பட்டது.
இவ்வாண்டு மட்டும் இதுவரை 116 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று AFP மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.