ஒருபுறம் பிரச்சாரம்:மறுபுறம் போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 14, 2019

ஒருபுறம் பிரச்சாரம்:மறுபுறம் போராட்டம்!

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக யாழ் நல்லூரில் இன்று மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திய பிரசார கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.


இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகியது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தும்இ குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரை உடனடியாக அங்கிருந்து வெளியேறக் கோரியும்இ தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க கோரியும் மேற்படி கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையாக வவுனியாவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சொல்லாதேஇ போர்க்குற்றவாளிகளைப் பாதுகாக்காதேஇ இனத்தை விற்று அரசியல் செய்யாதேஇ இலஞ்சம் வாங்கி வாக்களிக்கச் சொல்லாதேஇ பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க இணக்கம் வெளியிட்டவர்களே வெளியேறுஇ தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியும்இ பல சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் காணாமல் போன தமது உறவுகளை நினைத்தும்இ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் கடுமையாகச் சாடியும் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் கதறி அழுதமையை அவதானிக்க முடிந்தது.