வவுனியாவில் உள்ள தவசிக்குளம் பகுதியில் இயங்கிவரும் நல்லூரான் திருமண சேவையின் காரியாலயமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு, அங்கே காணப்பட்ட கணினி வன்தட்டு மற்றும் பெறுமதிமிக்க கைத்தொலைபேசிகள் போன்றன திருடப்பட்டுள்ளது. மேலும் இத் திருமண சேவையின் உரிமையாளருக்கும் சில தரகர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதமும் தொழில்ப் போட்டியுமே இச்சம்பவத்துக்கு காரணம் என்ற விதத்தில் பொலிஸில் முறைப்பாடானது உரிமையாளரினால் பதியப்படப்பட்டுள்ளது