வெள்ளை வாகனம் வருமென்பது தெரியும்… ஆனால் இவ்வளவு விரைவாக வருமென்பது தெரியாது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 30, 2019

வெள்ளை வாகனம் வருமென்பது தெரியும்… ஆனால் இவ்வளவு விரைவாக வருமென்பது தெரியாது!

இந்த அரசாங்கத்தின் கீழ் வெள்ளை வாகன கலாச்சாரம் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் நடக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவை நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது ஜேவிபி.

சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் ஒருவர் கடத்தலுடன் தொடங்கியுள்ள கடத்தல்கள் தீவிரமானது, அதே போல் சி.ஐ.டி இயக்குனர் சனி அபேசேகரவின் இடமாற்றமும் என தெரிவித்தள்ளார் ஜே.வி.பி எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி.

நேற்று (29) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக சிவில் சமூகக் குழுக்கள், மகா சங்கம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை மதிப்பவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

“பாதுகாப்பான நாட்டையும் ஆரோக்கியமான பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆணையை வழங்கினர். அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது. அவர் ஆணையை மதிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு எதிராக விசாரணை நடத்திய சிஐடி அதிகாரிகள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்பது அரசாங்கம் விரும்பாத அதிகாரிகளை அடக்குவது மற்றும் அவர்களுக்கு ஓரளவு அதிகாரிகளை நியமிப்பது என்று அர்த்தமல்ல. அரசியல்வாதிகள் விசாரணைகளை எதிர்கொண்டு, ஆதாரங்களை மாற்ற முயற்சிப்பதற்குப் பதிலாக நீதித்துறை முன் தங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும்“ என்று அவர் கூறினார்.

முன்னர் பொலிசாருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியது திருடர்கள் தான், ஆனால் இன்று பொலிசாரே திருடர்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.

“லசந்த விக்கிரமதுங்க கொலை, பல ஊழல் வழக்குகள் மற்றும் 11 இளைஞர்களைக் கடத்தியது தொடர்பாக விசாரணை நடத்திய சிஐடி அதிகாரி நிஷாந்த சில்வா, அவரது பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் சிக்கியவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்”என்றார்.