சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதிவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்காவை நீக்க சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளாளது. அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்தா அழகியவண்ணாநியமிக்கப்பட உள்ளார்.
லசந்தவின் நியமனம் தற்காலிகமானது என்றும், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நிரந்தரமான தொகுதி அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என சு.கவின் பதில் தலைவர் ரோஹண லக்ஷ்மண் பியதாச தெரிவித்துள்ளார்.
சு.கவின் மத்தியகுழு கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது, நாம் சிறிலங்கா அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட தொகுதி அமைப்பாளர்களை நீக்கி புதியவர்களை நியமிக்க முடிவெடுத்திருந்தது. இதன்படி, சந்திரிகாவின் பதவி பறிக்கப்படுகிறது.
குமாரதுங்காவும் அவரது அணியினரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.