தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா.! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 26, 2019

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா.!

தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மான மறவர்களை நெஞ்சிருத்தி வணக்கம் செலுத்தும் நாளே மாவீரர் நாளாகும். 1989ம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் முதற்களப் பலியாகிய லெப்.சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த (1987) நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினர்.

இத் தேசிய மாவீரர் நாளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்கினை மூத்த தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஒழுங்கமைத்து 1991 நவம்பர் 27ம் நாளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட தேசிய கட்டமைப்புக்கள் ஊடாக தமிழின உணர்வாளர்களதும், மக்களினதும் பங்களிப்போடு வருடம் தோறும் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

தாய்நாட்டு விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த வீரர்களை நினைவு கூருவதும், வணக்கம் செலுத்துவதும் ஒரு தேசிய இனத்தின் தார்மீகக் கடமையாகும். எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி தனது நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கத் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வருடத்தில் ஒரு நாளை ஒதுக்குவது தேசத்து மக்களது தலையாய கடமையாகும்.

இம் மாவீரர் எழுச்சி நாளைத் தடுக்கும் நோக்குடன் சிறீலங்கா புலானாய்வு முகவர்களாலும், வர்த்தக நோக்கம் கொண்டவர்களாலும் திட்டமிட்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதைத் தடுக்கும் முகமாக சட்டரீதியாக சிக்கல்களை உருவாக்கும் திட்டங்களையும் உருவாக்கி பின்னப்படும் சதிவலைகள் ஒவ்வொன்றும் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் சக்தியால் தடுக்கப்பட்டுவருகின்றது. இச் சதிமுயற்சி தொடர்பில் மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.

அன்பான தமிழீழ மக்களே! நவம்பர் 27 தமிழீழ விடுதலை மறவர்களுக்கான நாள். இந்நாள் இம்முறையும் வழமைபோன்று தாயகத்திலும், தமிழீழ மக்கள் செறிந்துவாழும் நாடுகளிலும் எழுச்சியாக நடைபெறவுள்ளது. இவ் எழுச்சி நிகழ்வில் அனைத்து தமிழீழ மக்களையும் அணிதிரண்டு தாயக விடுதலைக்காகத் தம்முயிரை தமிழீழ தேசத்தில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயநிர்ணய உரிமையோடும் வாழவிரும்புகின்றார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அனைத்துலகத்திற்கும், சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் தெரிவிப்போம்.