ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 26, 2019

ஆரையம்பதியில் மூன்று இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு, ஆரையம்பதி கிழக்கு திருநீற்றுக்கேணி குளத்தில் இன்று (25) காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெற்றுக் கலன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட படகு ஒன்றில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்துள்ளது.

இந்நிலையிலேயே இன்று மாலை இவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.