வியாழேந்திரன் ராஜபக்சக்களை கொலைகாரர் என்று கூறியவர் இப்பொது அவர்களுக்காக வாக்கு கேக்கிறார் வெக்கமில்லையா - அமீர் அலி பகீர் கேள்வி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 9, 2019

வியாழேந்திரன் ராஜபக்சக்களை கொலைகாரர் என்று கூறியவர் இப்பொது அவர்களுக்காக வாக்கு கேக்கிறார் வெக்கமில்லையா - அமீர் அலி பகீர் கேள்வி


வியாழேந்திரன் முதன்முதலாக நாடாளுமன்றம் வந்தபோது, ராஜபக்சக்களை கொலைகாரர் என்று கூறியவர், இன்று ராஜபக்சக்களிற்கே வாக்கு கேட்கிறார் என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் அமீர் அலி.

நேற்று (9) மட்டக்களப்பு கல்குடாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

கருணா வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்கள் இன்று தமிழர்களிற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். வியாழேந்திரன் முதன்முதலாக பாராளுமன்றம் வரும்போது, எங்கள் இரத்தத்தை குடித்த இராஜபக்சக்களிற்கு எந்த தன்மான தமிழனும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். ஆனால் இன்று ராஜபக்சக்களிற்கு வீடுவீடாக வாக்கு தேடுகிறார்கள்.

அவர்களிற்கு தன்மானமில்லாமல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மட்டக்களப்பில் உள்ளவர்கள் தன்மானத் தமிழர்கள் என்பதை நிரூபியுங்கள்.

இந்த ராஜபக்சக்களின் காலத்தில்தான் படையினரால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக கூறினார். இன்று ராஜபக்சக்களற்கு வாக்கு கேட்கிறார்கள்.

ஒரு காலத்தில் ராஜபக்சக்களின் கொலைவெறியை நிறைவேற்றுபவர்களாக இருந்த பிள்ளையாக் குழு, இப்பொழுது எச்சசொச்ச தமிழ் மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள் என்றார்.