என்ஜின் ரீபோர் பண்ணப்பட்ட கோட்டாபயவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கியது, வடக்கில் புதைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் எஞ்சிய தங்கத்தையும் எடுக்கவே என தெரிவித்துள்ளார் அசாத் சாலி.
மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (9) நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்ஜின் ரீபோர் பண்ணிய கேஸ் ஒன்று. 72 வயது கேஸ் ஒன்றை ஏன் கொண்டு வந்தார்கள்? பலன்ஸ் கொஞ்சம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தங்கம் கொஞ்சம் இருக்கிறதாம். புதைத்து வைக்கப்பட்டுள்ள கொன்ரெயினர்களை எடுக்க வேண்டுமாம்.
இந்த நாட்டில யுத்தம் நடந்தபோது ரஞ்சன் விஜயரத்னவின் காலத்தில், அவரது காலில் விழுந்து எனக்கு மனநிலை சரியில்லையென கூறி வெளிநாட்டுக்கு ஓடிப்போனவர். அங்கு
அணணனை நம்பி திரும்பி வந்தவர் 10 வருசம் என்ன செய்தார்? யோசெப் பரராஜசிங்கத்தை கொன்றார்.. மகேஸ்வரனை கொன்றார்.. தமிழ் மக்களை கொன்றார்கள். பரராஜசிங்கத்தை கொன்றவனை சிறையில் போட, அங்கு போய் பார்க்கிறார் அண்ணன். அவரை வெளியில் விடுவாராம். 16ம் திகதி அவருக்கு நாங்கள் விடுவோம்.
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை இராணுவத்திற்கு கொடுக்க வேண்டுமென்ற ரத்னதேரரும் அந்தப்பக்கம்தான் நிற்கிறார், ஹிஸ்புல்லாவும் அந்த பக்கம்தான் நிற்கிறார். இந்த நாட்டை பௌத்த நாடாக வேண்டும் என நளின் திசநாயக்க தெரிவிக்கிறார். ஈழக்கொடி பிடித்த வரதராஜ பெருமாளும் நிற்கிறார். கருணா, பிள்ளையான் எல்லாரும் அந்தப்பக்கம்தான் நிற்கிறார்கள் என்றார்கள்.