தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்காவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழர் தாயகம் எங்கும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
தமது ஆதரவாளர்களை வீடு வீடாக அனுப்பி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டுவதற்கும் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த 8 ஆம் திகதி கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில்
இந்நிலையில், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் ஒவ்வொரு பிரமாண்ட பிரசாரக் கூட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவுள்ளதுடன் வட்டார அடிப்படையிலும் கூட்டங்களை நடத்தவுள்ளது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறுவது குறித்து இதுவரை எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. என்றாலும், அவருக்கு ஆதரவுத் தெரிவித்துள்ளதால் சிலவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சஜித் பிரேமதாசவின் தேர்தல் மேடையில் ஏறுக்கூடும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.