தீவிரவாதிகளை வளர்த்தெடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும் - இராதாகிருஸ்ணன் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 9, 2019

தீவிரவாதிகளை வளர்த்தெடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும் - இராதாகிருஸ்ணன்

சஹரான் போன்ற தீவிரவாதிகளை வளர்த்தெடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும் என மலையக மக்கள முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ஹப்புகஸ்தலாவ மக்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ‘ஒன்றாய் முன்னோக்கி’ செல்வோம் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த நாட்டில் அன்மையில் ஏற்பட்ட கலவரங்களின் போது சிறுபான்மை மக்களை காப்பாற்றிய பெருமை ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்நதாக இருந்தது.

அந்த பிரச்சனைகளை பின்புறமாக இருந்து உருவாக்கியர்கள் எதிரணியில் தற்போது ஜனாதிபதி தேர்தலில் வாக்கு கேட்பவர்களே. இதனால் முஸ்லிம் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இதனாலயே முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக விலகினர். பின்னர் நிரபராதிகள் என்றதும் மீண்டும் இணைந்துக் கொண்டனர்.

சஹரான் என்ற தீவிரவாதிகளை வளர்த்து எடுத்த பெருமை எதிர்கட்சியினரையே சாரரும். அன்று ஐக்கிய தேசியக் கட்சி எங்களை காப்பாற்றியது. குறுகிய காலத்தில் சம்பந்தபட்டவர்களை கைதுசெய்து சட்ட நடடிக்கை எடுத்து தற்போது சுமூகமான நிலமை நிலவி வருகின்றது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியே.

அந்த வகையில் சிறுபான்மை மக்களுக்கு ஐ.தே.கட்சி பாதுகாப்பான ஒரு கட்சியாகும். எனவே மக்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.