ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமே இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.
தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிலர் நேற்று பிற்பகல் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க உள்ளிட்ட சிலரும் நேற்று மாலை சுதந்திர சதுக்கத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.