அனைத்து வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 16, 2019

அனைத்து வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த வாக்குப்பெட்டிகளை பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.