காணமல் போன யாழ் பல்கலைகழக மாணவன் சடலமாக மீட்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, November 11, 2019

காணமல் போன யாழ் பல்கலைகழக மாணவன் சடலமாக மீட்பு!

தேடுதலின் பின்னர் இன்று முற்பகல் குறித்த மாணவன் காட்டிற்குள்ளிருந்த மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குழிக்குள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

வவுனியா கனகரயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஓருவர் நேற்று (10) முதல் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து, இளைஞனின்
பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அவர் காலை சென்றதாக தெரிவிக்கப்படும் காட்டு பகுதியில் இளைஞர்கள், மற்றும் பொலிசார் தீவிர தேடுதல் நடாத்தியிருந்த நிலையில் நேற்று இரவு 11 மணிவரை அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவத்தில் யாழ் பல்கலைகழக மாணவனான 23 வயதான பாலசுப்பிரமணியம் தர்மிலன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.