பேரினவாத விமானப்படையினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 27, 2019

பேரினவாத விமானப்படையினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் 1990 ஆம் ஆண்டு விமானத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையத்தினம் இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 அன்று 12 அப்பாவி பொதுமக்கள் இலங்கை விமானப்படையின் கோர விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நினைவேந்தும் முகமாக வன்னி குரோஸ் தாயக நினைவேந்தல் பேரவையின் ஒழுங்கமைப்பில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.