ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையில் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலை பெற்றுள்ளார்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி கோத்தபாய 10 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷ இதுவரை 51.43 சதவீத வாக்குகளையும் சஜித் பிரேமதாஸ 42.14 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை அடுத்த ஜனாதிபதியாக கோத்தபாய வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ராஜதந்திரிகள் தமது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.