மக்கள் மத்தியில் மதிப்பழந்து போயிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியும் சுமந்திரனின் கட்சியும் மக்களை ஏமாற்றி வரும் தேர்தல்களில் வெல்வதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு முயற்சியை இறுக பற்றிக்கொள்வதாக முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஐ.தே.கவுடனான கள்ள உறவும் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளும் அவர்கள் மீதான அதிருப்தியை மக்களிற்கு அதிகரித்துவருவதுடன் மக்கள் முன்னணியின் உறுதியான செயற்பாடுகள் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களாக மாற்றி வருகின்றது.
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்னணியை வெட்டி சங்கரியுடன் கூட்டுச் சேர்ந்த பிற்பாடு அரசியலில் அவர் இருப்பதை மக்கள் மறக்குமளிவிற்கு நிலமை சென்றிருக்கிறது.
சரிந்து போயுள்ள செல்வாக்கை தூக்கி நிறுத்த துருப்புச் சீட்டில்லாமல் தவித்தவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்த அரசியல் கூட்டு ஒரு பிடியாக அமைந்திருப்பதால் அதைப்பிடித்துக்கொண்டு திரைமறைவில் சேர்ந்தியங்ககுவதென தீர்மானித்திருக்கிறார்கள்;
விரைவில் இவர்களது கள்ள உறவு ஊடகங்கள் வாயிலாக அம்பலமாகவுள்ளன.