50கோடி பெறுமதியான போதைப்பொருள் மூடையை கைப்பற்ற 50இலட்சம் பேரம் பேசியும் அசராமல் கடமையே கண்ணியமாக எண்ணி போதைப்பொருள் மாபியாக்களை கைது செய்த சூப்பர் பொலிஸ் உத்தியோகத்தர்.
நேற்றைய தினம் அத்துகிறிய பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்திற்குரியவரை பின்தொடர்ந்து போக்குவரத்துக் கடமையை விட்டுச்சென்று அவர் சென்ற ரகசிய வீட்டை தனியாக சென்று கண்காணித்து பரிசோதித்ததில் கெரோயின் போதைப்பொருள்களை மூடையாக மூடையாக இருந்ததை கைப்பற்றினார்.
அவ்விடத்தில் அவரிடம் பேரம் 50இலட்சம் இலஞ்சம் உயர்மட்ட அரசியல்வாதிகள், போதைப்பொருள் கடத்தல் தாதாக்கள் பேசியும் இடங்கொடாமல் பொலிஸ் நிலையத்திற்கும் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியமை மூலம் அவரது சேவைக்கு அணைத்து மக்களிடம் பாராட்டுகள் குவிந்துகொண்டிருப்பதுடன் தற்போது பல இணையதளங்களில் பிரபலமாகிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது