யாழில் தொடரும் சிறிலங்கா இராணுவத்தினரின் அடாவடித்தனம்- சிவவதனி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 4, 2019

யாழில் தொடரும் சிறிலங்கா இராணுவத்தினரின் அடாவடித்தனம்- சிவவதனியாழில் தொடரும் சிறிலங்கா இராணுவத்தினரின் அடாவடித்தனம் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

தட்டிக் கேட்கப்படாத தவறுகள் தொடர்கின்றன!

தமிழர் நிலங்களை விட்டு சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்!

இன்றைய இராணுவமயமாக்கல் முயற்சியை திரண்ட மக்கள் தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள்!

யாழ். கோட்டையை சுற்றிவளைத்த தமிழ் பொதுமக்கள் இன்று தற்காலிகமாக தடுத்தாலும் இனவாத அரசு சிங்கள பௌத்த மயமாக்கலை இராணுவமயமாக்கல் மூலம் தொடரவே செய்யும்!

கடந்த வருடம் யூன் மாதம் யாழ்.கோட்டையின் உட்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இன்று காலை அந்த முகாமில் இருக்கின்ற இராணுவத்தினர் ஒரு பௌத்த கோவிலினை சீமெந்து கொண்டு அமைக்க முற்பட்ட போது அது தமிழ் மக்கள் எதிர்ப்பில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது

ஒரு வருடத்திற்கு முன்னர் இராணுவ முகாம் பின்னர் அதில் புத்த விகாரை
சிங்கள பௌத்த மயமாக்கல் மிகச் கச்சிதமாக திட்டமிடப்பட்டு மேற்கோள்ளப்பட்டு வருகின்றது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இவ்வாறு பல உதாரணங்கள் காலப்போக்கில் நிகழத்தான் போகின்றன.

ஆனால் தமிழ் மக்கள் போராட்டங்கள் தமிழ்  மக்கள் வாழும் பகுதியில் இராணுவத்திற்கு என்ன வேலை என தட்டிக் கேட்டு தொடர வேண்டும்!

சர்வதேச சமூகத்தின் தலையீட்டோடு இனப்படுகொலைக்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே இவை போன்ற இன அழிப்புச் செயல்கள் தொடராமல் நிறுத்த முடியும்!