தமிழகத்தை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம்... குற்றவாளிகளை பற்றிய தகவலுக்கு சம்மானம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 1, 2019

தமிழகத்தை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம்... குற்றவாளிகளை பற்றிய தகவலுக்கு சம்மானம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்த தகவல் தருபவருக்கு சம்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் 1998ஆம் ஆண்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதில், 58பேர் சம்ப இடத்திலேயே பலியாகினர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 168பேர் கைது செய்யப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டனர். இதில் இன்னும் 16பேர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கோவையை சேர்ந்த டெய்லர் ராஜா, முஜிபூர் ரகுமான் ஆகியோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேபோல மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக், அயூப் என்ற அஷ்ரப் அலி ஆகியோரும் கைது செய்யப்படவில்லை.

மேற்கண்ட நான்கு பேரும், காவல்துறையினர் பிடியில் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வீதம் சம்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர், விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.