விமானப்படை, கடற்படையுடன் இணைந்து, சிறிலங்கா இராணுவம், நடத்தி வரும் நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியின் இறுதி ஒத்திகை இன்று திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
செப்ரெம்பர் 3ஆம் நாள் ஆரம்பமாகிய நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சி நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், பிரமாண்டமான இறுதி ஒத்திகைப் பயிற்சி இன்று நடைபெறவுள்ளது.
மூன்று வாரகால கூட்டுப் பயிற்சியில், 100 வெளிநாட்டுப் படையினர், நேரடியாகவும் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.
சிறிலங்காவின் 2400 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்குபற்றுகின்றனர்.
இதற்கிடையே நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சியை பார்வையிடுவதற்காக, பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹசைன் மும்தாஸ் சிறிலங்கா வந்துள்ளார். அவருடன் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் குழுவொன்றும் வந்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் சிறப்புப் படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹசைன் மும்தாஸ், மின்னேரியாவில் அமைந்துள்ள நீர்க்காகம்- X கூட்டுப் பயிற்சி தலைமையகத்துக்கு நேற்று சென்று பார்வையிட்டுள்ளார்