இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முப்படையினர் அனைவரும் நாடு முழுவதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வர்த்தமானி கடந்த 22ஆம் திகதியில் இருந்து செயற்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.