இலங்கையில் வழக்குகள் இல்லாத அரசியல்வாதி இல்லை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 29, 2019

இலங்கையில் வழக்குகள் இல்லாத அரசியல்வாதி இல்லை

நிதி மோசடி தொடர்பாக மக்கள் வழக்குத்தொடர அரசியல் பின்னணியே காரணம். இலங்கையில் வழக்குகள் இல்லாத அரசியல்வாதிகளே கிடையாது என தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து வைத்த அதன் தலைவர் ஆனந்தராஜா தெரிவித்தார்.

வவுனியாவில் தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பணம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றபோது, நீங்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்திருந்தீர்கள். அதில் பொது மக்களது பணம் சூறையாடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதேவேளை உங்கள் மீது குற்றச்சாட்டும் சில மக்கள் மத்தியில் உள்ளது. இது தொடர்பாக உங்களது கருத்து என்ன என ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தினையும் சட்டத்தினையும் மதிப்பதாலேயே நான் இன்று இந்த இடத்தில் இருக்கின்றேன். பல வழக்குகளையும் பல விடயங்களையும் நாங்கள் நேரடியாக சந்திக்கின்றோம்.

இதற்கு பின்னால் பாரிய அரசியல் பின்னணி கடந்த காலத்தில் இருந்தது.
இந்த மக்கக்கு பின்னால் நின்று எந்த சக்தி வழக்குகளை தொடர வைத்தது என்பது தெரியும். வழக்குப்போட்ட மக்களுக்கு எங்களது உண்மையான நிலைமை தெரியும். ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல இருநூறு பேர் வரையிலேயே அவ்வாறு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதனை நான் மறுக்கவில்லை. ஆந்த பாதிப்புக்கு நிவர்த்தி செய்யக்கூடிய அத்தனை வியடத்தினையும் நான் செய்துகொண்டே இருக்கின்றேன். நிச்சயமாக அந்த மக்களை இவ்வாறே விட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் செய்து முடிப்பேன்.

இதேவேளை வவுனியாவில் ஒரே தடவையில் அதிகளவான வழக்குகள் பதியப்பட்டவராக உள்ளீர்கள். இந் நிலையில் வழக்குகளில் இருந்து நீங்கள் விடுபட்டுள்ளீர்களா? இவ்வாறான நிலையில் மக்கள் உங்கள் பின் அணி திரள்வார்கள் என எண்ணுகின்றீர்களா என ஊடகவியலாளரொருவர் கேட்டபோது,
இலங்கையில் வழக்கு தொடரப்படாத அரசியல்வாதி இல்லை. தற்போது ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள ஒருவரும் கிழமைக்கு ஒரு தடவை நீதிமன்றத்திற்கு சென்றுவருகின்றார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரைக்கு அவர் நிரபராதிதான். நாங்கள் சட்டத்தினை மதித்து நீதிமன்றத்தினை மதித்து வவுனியாவில் இருக்கின்றோம். எங்களது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு 100 விதம் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது.
திட்டமிட்ட ரீதியில் சில விடயங்கள் நடைபெற்றது. இதில் மக்களோடு நானும் ஏமாந்துபோய்விட்டேன். 100 வீதம் நானும் இந்த விடயத்தில் ஏமாந்துபோய்விட்டேன். ஏமாந்ததன் விளைவு என்னை நம்பி எங்கள் நிறுவனத்திற்கு பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த பணம் மீண்டும் போய் சேர வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். நாங்களும் நீதிமன்றத்தில் சரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றோம். அதனூடாக சரியான நீதி எங்களுக்கும் கிடைக்கும் என்று நானும் உள்ளேன் என தெரிவித்தார்.