யாழ்ப்பாணத்தில் இரகசியமாக திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் (ஓஎம்பி) அலுவலகத்தை உடனடியாக மூட வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆரம்பித்த போராட்டம் புதிய வடிவத்தை அடைந்துள்ளது.
யாழ் ஓஎம்பி அலுவலகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கல்வியங்காட்டில் அமைந்துள்ள ஓஎம்பி அலுவலகத்தின் முன்பாக அமைந்துள்ள ஆலயத்திற்கு அருகில் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இரகசியமாக திறக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தை உடனடியாக இழுத்து மூட வேண்டும், போலி அமைப்புக்கள் எமக்கு தேவையில்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறுவதைபோல, சுழற்சிமுறையில் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.