ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பேரணி-வாசுதேவ நாணயக்கார - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, September 8, 2019

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பேரணி-வாசுதேவ நாணயக்கார

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் அல்ல, யார் களமிறங்கினாலும் படுதோல்வியையே சந்திப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு நாடுதழுவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்களை ஒன்றிணைந்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றுத்திரட்டி அரசாங்கத்திற்கு குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பேரணி ஒன்றினையும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடப்பு அரசாங்கம், ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை இவ்விரு விடயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பலமாக அரசாங்கத்தை உருவாக்குவதே பிரதான எதிர்பார்ப்பு எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்