கிளிநொச்சி பூநகரி பகுதியில் குளத்தில் மூழ்கிய குடும்பமொன்றை அந்த பகுதியிலுள்ள இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
பூநகரி அரசபுரகுளத்தில் நேற்று தாயொருவர் தனது மூன்று குழந்தைகளுடன் குளிக்க சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் சேற்றுக்குழிக்குள் சிக்கி மூழ்கினர்.
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு இராணுவத்தினர் விரைந்து செயற்பட்டு, மூழ்கியவர்களை மீட்டனர்.
அலோசியஸ் ஜெயந்திமலா (44) அவரது மூத்த மகன் அலோசியஸ் அம்பராசா (14), இரண்டாவது மகன் அலோசியஸ் அனஸ்தான் (12) ஆகியோர் மீட்கப்பட்டனர்