யாழ் பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் மோதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 13, 2019

யாழ் பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் மோதல்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையிலான மோதலில் 3 பேர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழ்.நகரில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது.

இந்த முரண்பாடு இன்று காலை வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன. இதன்போது 3 இளைஞா்கள் கத்திக் குத்துக்குஇலக்காகியுள்ளனர்.

ஒருவருக்கு வயிற்றிலும்,ஏனைய இருவருக்கும் கைகள், கால்கள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நீண்டகாலமாக முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன எனவும், இது பாரிய விளைவினை ஏற்படுத்தி அங்காடிகளை அப்புறப்படுத்தக் கூடிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் சக அங்காடி வியாபாரிகள் கூறுகின்றனர்