வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டதால் நோயாளர்கள் பெரும் அவலங்களை எதிர்நோக்கினர். இச்சம்பவம் நேற்று (14) சனிக்கிழமை இடம்பெற்றது.
வைத்தியர்களும் ஊழியர்களும் சுற்றுலா செல்வதற்காகவே மேற்படி சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது எனத் தெரியவருகின்றது.
வவுனியா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ள பணித் தொகுதியினர் சுற்றுப் பயணம் சென்றமையினால் நேற்று முன்தினம் மாலையுடன் இழுத்து மூடப்பட்டுள்ளது. மூடப்பட்ட பிரிவில் இருந்த நோயாளிகள் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நோயாளிகளில் அக்கறை இன்றி விடுதியை மூடிவிட்டு சுற்றுலா சென்ற வைத்தியர்களின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் என்பதால் அவர்கள் சென்றனர். அனைவரும் சொந்த விடுமுறையிலேயே பயணித்தனர். இன்று (15) அந்த விடுதி திறக்கப்படுமம் என்றார்.