நிபந்தனை அடிப்படையிலான அரசியல் பயணத்திற்கு நான் தயாரில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
களுத்துறை - மத்துகமை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே இதனை தெரிவித்தார்.
மேலும்,
நான் யாரின் கைப் பொம்மையும் இல்லை. நான் நிபந்தனைகளுக்கு அடிபணிந்ததாக சொல்லப்பட்டது தவறு. ஜனாதிபதி பதவியை விட எனது சுயகௌரவம் மேலானது - என்றார்.