ஒப்பற்ற தியாகத்தை உலகறியச் செய்த ஈழத் தமிழர்களின் உன்னத புதல்வனுக்கு நினைவு தினம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 26, 2019

ஒப்பற்ற தியாகத்தை உலகறியச் செய்த ஈழத் தமிழர்களின் உன்னத புதல்வனுக்கு நினைவு தினம்!

ஒப்பற்ற தியாகங்களையும் உயரிய ஈகங்களையும் ஈழத் தமிழினத்தின் கௌரவான வாழ்விற்காய் புரிந்த உன்னத பிறவிகளுள் உச்சந் தொட்ட ஈழத் தமிழர்களின் தவப் புதல்வனின் 32 நினைவுதினம் ஈழத் தமிழர்கள் வியாபித்து வாழும் தேசங்கள் எங்கும் நினைவு கூரப்படுகின்றது.

மருத்துவபீடக் கல்வியை துாக்கியெறிந்து தமிழ் மக்களின் கௌரவமான  வாழ்விற்காய் தன்னையும் விடுதலை போராளியாய் மாற்றிய யாழ்ப்பாணத்தில் ஊரெழு எனும் கிராமத்தை சேர்ந்த இராசைாயா பார்த்தீபனின் பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பினால் திலீபன் என்று மாற்றமடைகின்றது.

திலீபனாய் மாறியதில் இருந்து சுறுசுறுப்பாக இயங்கிய பார்த்தீபன், புலிகளின் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அரசியல் செயற்பாடுகளில் தனிமுத்திரை பதிதித்தான். அதன் காரணாமாக புலிகளின் தலையைினால் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.

அவனுடைய காலப் பகுதியிலேயே விடுலைப் புலிகளின் சிவில் நிர்வாக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட இந்தியத் தலையீடு மற்றும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் போன்ற நெருக்கடிகளை கையாள்வதற்கு புலிகளின் தலைமைக்கு பக்கபலமாக செயற்பட்டான் திலீபன்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்திய அமைதிப் படையின் நடவடிக்கைகள் அமைவதை அவதானித்த புலிகள், தமிழ் மக்களினதும் புலிகளினதும் எதிர்பார்ப்புக்களை இந்திய தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் சாத்வீக முறையில் புரிய வைக்க விரும்பினர்.

இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து  நீராகாரம் அற்ற உண்ண விரதப் போராட்டம் திலீபனினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் திலீபனின் கோரிக்கைகளில் இருந்த நியாயம் இந்திய தேசத்தினால் கண்டு கொள்ளப்படாத நிலையில்  12 ஆவது நாள் தியாகி திலீபனின் உயிர் பிரிந்தது.

இவரின் மறைவு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட முறுகல் நிலைக்கும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலுவான நிலையை அடைவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ஒப்பற்ற தியாகத்தை தமிழ் இனத்திற்காய் அரங்கேற்றிய தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதவனின் சிறப்பு தொகுப்பு காணொளியாக…