டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை நிகழ்வில் தமிழீழதேசியத் தலைவரின் புகைப்படமும் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, September 27, 2019

டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை நிகழ்வில் தமிழீழதேசியத் தலைவரின் புகைப்படமும்


ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர வலியுறுத்தியும் காஷ்மீரி மக்களின் உரிமைகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்தும் தடையை மீறி டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியில் தமிழகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ்த் தேசிய பேரியக்கத் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அவர்களும் பங்கேற்றுள்ளார்,

இதில் காஷ்மீரிய , சீக்கிய மற்றும் இந்திய அரசினால் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் பல்வேறு இனத்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர்,
இதில் புரட்சியாளர்கள் படங்களுக்கு நடுவே தமிழீழ தேசியத்தலைவரின் படங்களும் பாலச்சந்திரன் படங்கள் தாங்கிக் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.