நிந்திப்பது தேசியத் தலைவரை, திருவோடு ஏந்துவது விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய கிளையிடம் - விக்னேஸ்வரனின் தகடு தத்தம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, September 10, 2019

நிந்திப்பது தேசியத் தலைவரை, திருவோடு ஏந்துவது விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய கிளையிடம் - விக்னேஸ்வரனின் தகடு தத்தம்!தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை சர்வாதிகாரி எனும் தொனியில் விமர்சித்தவாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய கிளை ஒன்றிடம் தமிழ் மக்களின் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் நிதியுதவி கோரியிருப்பது பற்றிய நம்பகமான தகவல்கள்  கிடைத்துள்ளன.

தனக்கு உள்ள மக்கள் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், இந்தியாவிற்கும் காண்பித்து, தன்னை இரா.சம்பந்தருக்கு அடுத்தபடியான தமிழ்த்; தலைவராகக் காண்பிக்கும் சுயலாப நிகழ்ச்சித் திட்டத்துடன் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் என்ற பெயரில் பேரணி ஒன்றை சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

சிங்கள அரசின் திட்டமிட்ட நிலக் கபளீகர நடவடிக்கைகளால் கொதிநிலையில் காணப்படும் திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களில் பேரணியை நடத்தித் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அனைத்துலக சமூகத்திற்கு இடித்துரைப்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் இப் பேரணியை நடாத்துவதற்கான முனைப்புக்களில் விக்னேஸ்வரன் அவர்கள் ஈடுபட்டிருப்பது அவரது சுயலாப நிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாக அமைவதாக நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப் பேரணிக்கான செலவுகளைப் பூர்த்தி செய்வதற்கு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நாட்டுக் கிளையொன்றிடம் பெரும் தொகை நிதியுதவியை சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் குறித்த கிளைப் பொறுப்பாளர் மற்றும் பரப்புரைப் பொறுப்பாளரிடமே இந்த நிதியுதவியை விக்னேஸ்வரன் அவர்கள் கோரியிருப்பதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது.

எனினும் தமிழீழ தேசியத் தலைவரை சர்வாதிகாரி என்ற தொனியில் நிந்தித்தவாறு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் குருதிக் கறை படிந்திருப்பதாக குற்றம் சுமத்தும் விக்னேஸ்வரனுக்கு எந்த நிதியுதவியும் வழங்கப்படக் கூடாது என்று குறித்த கிளையின் பொறுப்பாளர் மற்றும் பரப்புரைப் பொறுப்பாளரிடம் அதன் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளைப் ‘பாசிசப் புலிகள்’ என்று நிந்தித்து அண்மையில் யாழ்ப்பாணத்தில் நூல் ஒன்றை வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் மண்டையன் குழு அணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கைகளுக்கு இந்நிதி செல்லும் அபாயம் இருப்பதாகவும், குறித்த கிளைப் பொறுப்பாளர் மற்றும் பரப்புரைப் பொறுப்பாளரிடம் அக் கிளையின் செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தேசியத் தலைவரை விக்னேஸ்வரன் நிந்திக்கும் ஒலிப்பதிவு