ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அது எவரும் எதிர்பார்க்காததாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மௌனம் காக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்;டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவது, தோல்வியடைவதை நாட்டு மக்களே இறுதியில் தீர்மானிப்பார்கள். ஜனநாயகத்தை மதிக்கும் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதை கட்சியே தீர்மானிக்க வேண்டும்.
அரசியல் தேவைகளுக்காகவும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றாட்போல் அரசியல் தீர்மானங்களை ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.. எமது அரசியல் பயணம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அக் கட்சியிலே முடிவுறும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருப்பேன் என்றும் அவர் கூறினார்.