பசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த இளைஞர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 4, 2019

பசுவை கடத்தி பாலியல் சித்ரவதை செய்த இளைஞர்கள்!

திருப்பூர் அருகே பசுமாட்டை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, வடமாநில இளைஞர்கள் மூவரைப்பிடித்து, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

பல்லடம் அடுத்த பெருமாக்கவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது பசு பலவீனம் அடைந்து வந்ததால் நேற்றிரவு வீட்டுக்கு வெளியே கட்டி வைத்து கண்காணித்து வந்தார்.

நள்ளிரவில் பசுவின் சப்தம்கேட்டு விழித்த அவர், வெளியே வந்து பார்த்தபோது பசுவை காணவில்லை. அந்தப்பகுதியில் தேடியபோது 3 வடமாநில இளைஞர்கள் பசுவை கடத்திச்சென்று கோழிப்பண்ணையில் கட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் பிடித்து வந்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் மூவரையும் மீட்டு விசாரித்ததில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்தவர்கள் என்பதும், அருகில் உள்ள கல்குவாரியில் பணி செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து இது போன்று பசுவிடம் பாலியல் சித்ரவதையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து காமக் கொடூரர்கள் மூவரையும் கைது செய்தனர்.