மஹிந்தவின் சீடர்கள் வன்புணர்வாளர்கள்- சீறிய சஜித் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 2, 2019

மஹிந்தவின் சீடர்கள் வன்புணர்வாளர்கள்- சீறிய சஜித்


மஹிந்த ராஜபக்ச அரசின் அதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100 இற்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்ந்தார்கள் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச சராமரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் பேசும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும்,

நேற்று மகளிர் உரிமை பற்றி சிலர் கதைப்பதை பார்த்தோம். பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் பேசுகின்றனர். ஆட்சி அதிகாரம் இருந்த போது அந்த அதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100-கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொண்டாட்டங்களை நடத்திய போது அவர்கள் மெளனமாக இருந்தனர். அதனை அனுமதித்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களும் அதனை எதிர்கொண்டனர்.

தங்காலையில் வெளிநாட்டு தம்பதியினருக்கு பிரதேச சபை முக்கியஸ்தர் இழைத்த குற்றத்தை இந்த நாட்டு மக்கள் மாத்திரமல்ல முழு உலகமும் அறிந்தது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் எதிர்காலத்தில் பெண்களை எப்படி பாதுகாப்பார்கள். என்றார்.

பொதுஜன பெரமுனவின் மகளிர் நிகழ்வில் நேற்று முன் தினம் பேசிய கோத்தாபய ராஜபக்ச "பெண்கள், குழந்தைகளை கவனிக்க வேண்டும்" என்றும், மஹிந்த ராஜபக்ச "தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்" எனவும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே சஜித் இவ்வாறு சாடியுள்ளார்.