உணர்வெழுச்சியுடன் நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, September 26, 2019

உணர்வெழுச்சியுடன் நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) நல்லூரில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பொதுச் சடரினினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைத்தனர்.

தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மண்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.