களுத்துறையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெரும மற்றும் ஐவரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்படுள்ளது.
நாளை (15) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்னால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.