திருக்கோவிலில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதானவீதி தம்பட்டை பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த சதீஸ்குமார் சஞ்சயன் (8 வயது) என்ற சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.