அடுத்த மாதம் முதல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தம் 6,000 ரூபா! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, September 4, 2019

அடுத்த மாதம் முதல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு மாதாந்தம் 6,000 ரூபா!காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஒக்ரோபர் 10ம் திகதி முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நிதி மற்றும் சமூக முன்னேற்ற அமைச்சுகளின் கூட்டு அமைச்சரவை முன்மொழிவு தெரிவித்துள்ளது.

இந்த கொடுப்பனவுகளை கோருவதற்கான செயல்முறையை எளிதாக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான காணாமல் போன சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்படும்.

காணாமல் போனவர்களிற்கான அலுவலகம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின்படி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கொடுப்பனவு திட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஏற்கனவே கூட்டாக நிராகரித்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பதிலையே எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.