கொழும்பில் முதன் முறையாக ஒன்று கூடிய 40 ஆயிரம் முஸ்லிம்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, September 2, 2019

கொழும்பில் முதன் முறையாக ஒன்று கூடிய 40 ஆயிரம் முஸ்லிம்கள்போரா சமூகத்தினர் நடத்தும் 'போரா' சமூக ஆசூரா தின சர்வதேச மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி ஸெய்யிதினா முபாதல் (முப்படேல்) ஸைபுத்தீன் தலைமையில் ஆரம்பமானது.

இம்மாநாடு இம்மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை, கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள போரா சமூக பள்ளிவாசலை மையப்படுத்தி நடைபெறவிப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலாத்துறை அதிகார சபை என இதனுடன் தொடர்புபட்ட நிறுவங்களின் ஊடாக இம்மாநாட்டிற்காக கொழும்பிலுள்ள முறையான மற்றும் முறைசாரா துறையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்தார்.

அத்துடன், இவர்களுக்காக கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் காலி ஆகிய நகரங்களிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான அறைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், இலங்கையில் மிகப் பெரிய சுற்றுலாத்துறைக்கு போரா இன முஸ்லிம்கள் 40 ஆயிரம் பேர் கொழும்பில் கூடியுள்ளமை இதுவே முதற்தடவையென்பதுவும் முக்கிய அம்சமாகும்.