எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸாவை வேட்பாளராக நிறுத்த கோரி மட்டக்களப்பில் எழுச்சிப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமாகியது.
அங்கிருந்து கல்லடி பாலத்தினூடாக சென்று மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக மருத்துவ பீடத்துக்கு முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.