யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு - அதிரடி காட்டிய இளைஞர் குழு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 17, 2019

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு - அதிரடி காட்டிய இளைஞர் குழுயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது.

நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட இராணுவத்தினர் 3 இளைஞா்களை கைது செய்துள்ளதோடு இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைக்கபப்ட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.