மாவனல்ல முறுத்தவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை ஜமேத்துல் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷிமுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ளவர் எனவும், இவர் சஹ்ரானின் இரண்டாவது குழுவின் தலைவர் எனவும் குற்றத்தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
அத்துடன் இலங்கை ஜமாத்துல் இஸ்லாம் அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கோட்பாட்டு ரீதியில் ஊக்குவிப்பு வழங்கியிருப்பதாகவும் அப்பிரிவு கூறியுள்ளது.