போர் குற்றச் சாட்டை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன - நேரு குணரட்ணம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, August 21, 2019

போர் குற்றச் சாட்டை சுமத்துவதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன - நேரு குணரட்ணம்

இலங்கையினுடைய புதிய இராணுவத் தளபதியான, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினைப் பதவியில் இருந்து இடைநிறுத்தி அவரை போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வழக்குத் தொடருவதற்கு போதியளவு ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவை தளமாக கொண்ட விசாரணைக் குழுவானது 2008 – 9 போரின் போது முக்கிய களநிலை கட்டளைத் தளபதிகளில் ஒருவரான சில்வாவினுடைய பணியினை விபரிக்கும் 137 பக்க ஆணவக் கோவையை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணக் கோவையானது அவருக்கு எதிரான அல்லது இன்றைவரையான இலங்கையின் போர்க்கால கட்டளைத் தளபதிக்கு எதிரான மிகவும் விரிவான ஆதாரங்களைக் கொண்டுள்ளது. இது படங்கள் சமகால குறுஞ்செய்திகள், இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்ட சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் போர் முடிவடைந்த பின்னர் உண்மையை மறைப்பதற்காக இணையத்தில் இருந்து அழிக்கப்பட்டு நீக்கப்பட்ட உத்தியோகபூர்வ இராணுவ வெளியீடுகளின் ஆதாரங்கள் இவற்றுடன் கடந்த ஐ நா விசாரணை அறிக்கைகளின் கண்டுபிடிப்புகள் பற்றிய வரைபுகளையும் ஒன்று சேர்த்து தொகுத்துள்ளது.

“என்னுடைய அணியினால் பல ஆண்டுகளாக கவனமாகச் சேகரிக்கப்பட்ட அதிர்ச்சியளிக்கும் அளவிலான ஆதாரங்கள் இந்த ஆவணக் கோவையில் உள்ளது” என ITJP இன் நிறைவேற்றுப்  பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “சர்வதேச நீதிமன்றங்களில் அல்லது சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் கூட இவ்வளவு ஆதாரங்கள் இருக்கவில்லை. இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை பதவியில் தொடர்ந்தும் இந்த மனிதர் இருப்பதற்கு சாக்குகள் எதுவும் சொல்லமுடியாது. அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டு குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”

இலங்கையில் இறுதிப் போர் நடாத்தப்பட்ட முறை பற்றி ஆராய்வதற்கு 2010 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று சர்வதேச சட்ட நிபுணர்களில் ஒருவராக சூக்கா இருந்தார். இதனைத் தொடர்ந்து 2012 இல் இலங்கையில் ஐ.நாவின் பாரிய தோல்விகள் பற்றி உள்ளக மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது அத்துடன் அதன் பின்னர்  உயர் ஸ்தானிகரின் மனித உரிமைகளுக்கான அலுவலகதத்தினாலும் ஒரு விசாரணை நடாத்தப்பட்டது.

"2015 ஆம் ஆண்டு தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்த பின்னர் ITJP ஆனது போர் தொடர்பான ஆவணப்படுத்தலையும் அது தொடர்பான சாட்சியங்களையும் சேகரித்து வருகின்றது. இது எமது அரச சார்பற்ற அமைப்பானது இறுதிக்கட்ட சிவில் யுத்தம் மற்றும் அதற்குப்  பின்னரான மீறல்கள் தொடர்பான மிகவும் விரிவாக ஆவணப் படுத்தப்பட்டுள்ள சாட்சியங்களை இப்பொழுது கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது. இந்த ஆவணக் கோவையானது நாங்கள் வைத்திருக்கும்  தகவல்களில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே என சூக்கா தெரிவித்தார். பல வருடங்களாகப் பெற்ற அறிவினைக் கொண்டு அர்ப்பணிப்பு மிக்க நிபுணர்கள் குழு செய்த வேலையில்  முக்கியத்துவத்துவத்தை இது காட்டுகின்றது.”

2015 ஆம் ஆண்டு புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்த இலங்கையின் புதிய அரசாங்கமானது கலப்பு நீதிமன்றம் உட்பட்ட ஒரு உறுதியான இடைக்கால நீதித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் ஐ நாவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தது. கடந்த காலத்தில் வாக்குறுதிகள் வழங்கியிருப்பினும், பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரில் மூத்த இராணுவ அதிகாரிகள் எவரும் அவர்களது நடவடிக்கைகளுக்காக குற்றங்காணப்படவில்லை. பதிலாக குற்றஞ்சாட்டப்பட்ட பலர் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளார்கள்.

ஜனவரி 2019 இல் சவேந்திர சில்வா இராணுவப் பிரதானியபாக பதவியுயர்வு வழங்கப்பட்டமையானது மிகவும் அதிரிச்சியானதாக இருந்தது. இலங்கையின் பகுதிகளில் முன்னர் இடம்பெற்ற போரில் உயிர்தப்பி இன்னமும் வாழ்ந்துவரும் தமிழர்கள் மத்தியில் இது அச்சத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் தெற்கில் உள்ள சிலர் அவரை இன்னமும் ஒரு வீரராகவே கருதுகின்றனர்.

“சவேந்திர சில்வா தண்டனையிலிருந்து பாதுகாப்பை அனுபவிக்கும் வரை சர்வதேச சமூகம் சட்ட ஆட்சியின் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் பற்றி முழுமையாகப் பேசமுடியாது. இந்த நபர் இராணுவத்தை நிர்வகித்துவரும் வேளையிலும் அத்துடன் அது மோசமான சர்வதேச குற்றங்களை புறக்கணித்துவரும் வேளையிலும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ நாவின் திணைக்களம் இலங்கையிலிருந்து அமைதி காக்கும் படையினரை எவ்வாறு பணியில் அமர்த்த முடியும். இலங்கை நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் இந்தப் பிராந்தியத்தில் இலங்கையுடன் நெருங்கிய இராணுவ உறவினைப் பேணிவரும் நாடுகள் சவேந்திர சில்வாவினுடைய நுழைவு அனுமதிகளை மறுதலிக்க வேண்டும் அல்லது பொதுவான சட்டவரையறையின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என சூக்கா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு, இலத்தீன் அமெரிக்காவில் தூதுவராக இருந்த, போரின் போது சவேந்திர சில்வாவின் நேரடி கட்டளைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரியாவிற்கு எதிராக சர்வதேச சட்டவரையறையின் கீழ் தொடர்ச்சியான போர்குற்ற வழக்குகளை ITJP பதிவு செய்தது. இந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கு முதல்நாள் ஜெயசூரியா நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். அத்துடன் பிறேசிலிற்கோ அல்லது சிலிக்கோ திரும்பி வந்து ஒரு சர்வதேச நீதிமன்றத்தில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை சோதித்துப் பார்ப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் ஜெகத் ஜெயசூரியா எடுக்கவில்லை.