நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.மிகவும் பக்தி பூர்வமாக இந்நிகழ்வு நடைபெற்றிருந்து.
இதனிடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாவற்குழி,செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் புதிதாக இராணுவ சோதனை சாடிகள் முளைத்துள்ளன.வாகனங்கள் இச்சோதனை சாவடிகளில் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.
இன்னொருபுறம் ஆலய சூழலில் உள்ள குடியிருப்புக்கள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் இவ்வாறு விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நல்லூரில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் சிவில் உடை தரித்த பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.