லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 9, 2019

லொறி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம்!

ஹற்றன்-நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் எனும் பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு 15 தொன் கஜூ விதைகளை ஏற்றிச்சென்ற லொறியே இன்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது.

லொறியின் தடுப்புக் கட்டை (பிரேக்) செயலிழந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சாரதியும், உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இவ்விபத்து குறித்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.