ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 9, 2019

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி நாபோலி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கடலில் குளிப்பதற்காக சென்ற இலங்கையர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

ஷாந்த ஜயவிக்ரம மற்றும் எல்.எம்.சுஜித் என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எல்.எம்.சுஜித் என்பவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று ஷாந்த ஜயவிக்ரம என்பர் உயிரிழந்துள்ளார். இரண்டு மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை சுவிட்சர்லாந்தில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மூன்று இலங்கையர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் சிறுமி ஒருவரும் உள்ளடங்கும்.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கையர்கள் அகால மரணத்திற்குள்ளாவது குறித்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.