மகரகம பவுனுவாவை சேர்ந்த பொலிஸாரினால் பெண்ணொருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாராம்பரிய மருத்து சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
மது ஆன் ரணவீர என்ற ஒரு பிள்ளையின் தாயாரை காவல்துறையினர் மோசமாக தாக்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பெண் பத்திரிகையாளராகவும் பணிபுரிகின்றார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் கதிரையாலும் காலாலும் மது ஆண் ரணவீரவை தாக்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்தவ மதகுருவொருவரின் முன்னிலையில் அந்த பெண் தாக்கப்பட்டார் எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட பெண் உடைமாற்றும்போது பொலிஸார் அதனை பதிவு செய்தனர் எனவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.
தாக்கப்பட்ட பெண் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் குறித்து பதில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மகளிர் உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.